/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ அரிசி பறிமுதல்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ அரிசி பறிமுதல்
ADDED : மே 09, 2024 11:36 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், போத்தனுார் - செட்டிபாளையம் ரோட்டில், போத்தனுார் மேம்பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில், 30 கிலோ எடையுள்ள, 20 மூட்டைகளில், 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
வாகனத்தை ஓட்டி வந்த கேரள மாநிலம், மூங்கில்மடையை சேர்ந்த டிரைவர் தமிழ்செல்வன்,45, என்பவரிடம் விசாரித்ததில், போத்தனுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, சொந்த வாகனத்தில் கேரள மாநிலத்தில், வடமாநில தொழிலாளர்களுக்கு விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், ரேஷன் அரிசி, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.