/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுடன் முதல்வர் முகாம் 600 மனுக்கள் பெறப்பட்டன
/
மக்களுடன் முதல்வர் முகாம் 600 மனுக்கள் பெறப்பட்டன
ADDED : ஆக 10, 2024 03:11 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோவில்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் நேற்றுமுன்தினம் நடந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், மக்கள் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில், மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து ஐந்தாவது முகாமாக கிணத்துக்கடவு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வரதனூர், காணியாலாம்பாளையம், சோழனூர், கக்கடவு, தேவனாம்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு முகாம் நடந்தது.
இதில், கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய்குமார் மற்றும் பலஅரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும், முகாமில், 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.