/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
6ம் தேதி மேயர் தேர்தல்; கமிஷனர் ஆலோசனை
/
6ம் தேதி மேயர் தேர்தல்; கமிஷனர் ஆலோசனை
ADDED : ஆக 03, 2024 09:50 PM

கோவை ; கோவை மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கில், தேர்தல் நடத்தும் அலுவலரான, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வசுரபி, உதவி கமிஷனர்கள் மோகனசுந்தரி, உஷாராணி மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.
மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைகளை, கமிஷனர் விளக்கினார்.
தேர்தல் நடைபெறும் ஆக., 6ம் தேதி காலை, 10:30 மணிக்கு முன்னதாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென, கவுன்சிலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''மேயர் தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில், 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்துவது; நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்வது; வேட்பு மனு தாக்கல் நடைமுறை; பேனா, மொபைல் போன் பயன்பாடு, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது,'' என்றார்.