/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை தொகுதிக்கு 7 வேட்பு மனு தாக்கல்
/
கோவை தொகுதிக்கு 7 வேட்பு மனு தாக்கல்
ADDED : மார் 26, 2024 01:29 AM
கோவை;கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட, இதுவரை, ஏழு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட, சேரன் மாநகர் விளாங்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், சுயேட்சையாக ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரிடம், அ.தி.மு.க., சார்பில், உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், நேற்று மூன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக, சின்னவேடம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில், காளப்பட்டியை சேர்ந்த கலாமணி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் வேட்பு மனு வழங்கியுள்ளனர்.

