/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
70 சதவீத குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வந்தது
/
70 சதவீத குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வந்தது
ADDED : ஆக 27, 2024 01:58 AM
அன்னுார்;அன்னுார் மற்றும் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் நேற்று 70 சதவீத குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வந்தது.
அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகள் 1916 கோடி ரூபாயில் கடந்த ஆண்டு நிறைவடைந்தது.
2023 பிப். முதல் சோதனை ஓட்டம் நடந்தது. கடந்த 17ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை பயன்பாட்டுக் கொண்டு வந்தார். இத்திட்டத்தில் மூன்று மாவட்டங்களில் 1045 குளம், குட்டைகள் பயன்பெறுகின்றன கோவை மாவட்டத்தில் 258 குளம், குட்டைகள் பயன்பெறுகின்றன.
இந்நிலையில், நேற்று 1,045 ஏக்கர் பரப்பளவு உள்ள காட்டம்பட்டி குளம், 160 ஏக்கர் பரப்புள்ள அக்ரஹார சாம குளம், 125 ஏக்கர் பரப்பளவு உள்ள காளிங்கராயன் குளம், 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரங்குளம் உள்பட அன்னுார் மற்றும் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 70 சதவீதம் குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வந்தது. விவசாயிகள், தன்னார்வலர்கள், பலர் அக்ரஹார சாமக்குளத்தில் பூக்களை தூவி வரவேற்றனர். மகிழ்ச்சி தெரிவித்தனர்.

