/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
233 மையங்களில் 'குரூப் 4' தேர்வு 70,160 விண்ணப்பதாரர்கள் 'ரெடி'
/
233 மையங்களில் 'குரூப் 4' தேர்வு 70,160 விண்ணப்பதாரர்கள் 'ரெடி'
233 மையங்களில் 'குரூப் 4' தேர்வு 70,160 விண்ணப்பதாரர்கள் 'ரெடி'
233 மையங்களில் 'குரூப் 4' தேர்வு 70,160 விண்ணப்பதாரர்கள் 'ரெடி'
ADDED : மே 31, 2024 01:42 AM
கோவை;கோவை மாவட்டத்தில், 233 மையங்களில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூன் 16ல் நடக்கிறது; மொத்தம், 70 ஆயிரத்து, 160 பேர் இத்தேர்வு எழுத இருக்கின்றனர்.
தமிழகத்தில் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வாயிலாக போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.
ஜூன் 9ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 போட்டித்தேர்வு நடக்க இருக்கிறது. கோவை மாவட்டத்தில், 144 இடங்களில், 233 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. மொத்தம், 70 ஆயிரத்து, 160 பேர் இத்தேர்வு எழுத இருக்கின்றனர்.
இத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது தொடர்பான கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று நடந்தது.
போட்டித்தேர்வுகள் நடைபெறும் நாளன்று, சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும், தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகிக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், தீயணைப்பு துறையினர் 'அலெர்ட்' ஆக இருக்க வேண்டுமென, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.