/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தட்டச்சு தேர்வில் 73 பேர் பங்கேற்பு
/
தட்டச்சு தேர்வில் 73 பேர் பங்கேற்பு
ADDED : செப் 02, 2024 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை:வால்பாறையில் நடந்த தட்டச்சு தேர்வில், 73 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
வால்பாறையில் ஆண்டு தோறும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தட்டச்சு தேர்வு நடக்கிறது. இந்த ஆண்டிற்கான தட்டச்சு தேர்வு வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது.
முதன்மை கண்காணிப்பாளர் சிவன்ராஜ் (வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி), துணை கண்காணிப்பாளர் சந்திரமூர்த்தி (நாச்சிமுத்துபாலிடெக்னிக்), ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடந்தது. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வில், வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த, 73 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.