/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை ஊசி பயன்படுத்திய இளைஞர்கள் 8 பேர் கைது
/
போதை ஊசி பயன்படுத்திய இளைஞர்கள் 8 பேர் கைது
ADDED : மார் 12, 2025 11:00 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், போதை ஊசி பயன்படுத்திய இளைஞர்கள் எட்டு பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி - மீன்கரை ரோடு இரட்டை கண் பாலத்தின் கீழ், சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மேற்கு போலீசார், சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், தாராபுரம் அம்மாபட்டியை சேர்ந்த இமாம் அலி, 39, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேருநகர் ேஷக் பரீத், 23, மார்க்கெட் ரோடு ெஷரிப் காலனி சலீம், 23, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த நந்தகுமார், 22, குமரன் நகர் பாவா இப்ராஹீம், 35, முஸ்தபா,25, முகமத் அலி, 37, மீன்கரை ரோடு சக்திநகர் ரத்தினகுமார்,39, ஆகியோர் என்பதும், போதை ஊசி பயன்படுத்தியதும் தெரியவந்தது.
அவர்களை கைது செய்து விசாரித்ததில், 'பல்லடத்தை சேர்ந்த முரளிகுமார் என்பவரிடம் இருந்து, போதை ஊசிகளை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, போதை ஊசிகள், போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.