/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் மருந்தகங்களில் 90 சதவீதம் தள்ளுபடி
/
முதல்வர் மருந்தகங்களில் 90 சதவீதம் தள்ளுபடி
ADDED : பிப் 24, 2025 11:22 PM
கோவை, ; கோவை சாயிபாபாகாலனி என்.எஸ்.ஆர்.,ரோட்டில் உள்ள, முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடந்தது.
முதல்வர் மருந்தக உரிமையாளர் சரவண கண்ணன் கூறுகையில், ''இங்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கான மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் உள்ளன. யுனானி, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பிற பிராண்ட் மருந்து மாத்திரைகளும் உள்ளன. வெளியில் உள்ள மருந்துக்கடைகளில் 50 ரூபாய்க்கு வாங்கும் சர்க்கரை நோய்க்கான மாத்திரையை, இங்கு 13 ரூபாய்க்கு வாங்கலாம். பிராண்ட் கம்பெனி மருந்துகளுக்கு, 25 சதவீதமும், மற்ற மருந்துகளுக்கு 90 சதவீதம் வரையும், தள்ளுபடி அளிக்கப்படுகிறது,'' என்றார்.
கோவை எம்.பி.,ராஜ் குமார், கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.