தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 97 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்

97 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்

97 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர ஸ்கூட்டர்


ADDED : ஜூலை 08, 2024 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

மாற்றுத்திறனாளிகள் 97 பேருக்கு, மொத்தம் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டன.

அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், 2023 - 24 நிதியாண்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 92 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.88.33 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்கள்;

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக வாகனம், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் போன் என, 112 மாற்றுத்திறனாளிகளுக்கு, மொத்தம் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us