/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு ஆங்கில தேர்வு 39,988 பேர் பங்கேற்பு
/
10ம் வகுப்பு ஆங்கில தேர்வு 39,988 பேர் பங்கேற்பு
ADDED : மார் 29, 2024 12:40 AM
கோவை;கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலப் பாடத்தேர்வை, 39 ஆயிரத்து 988 பேர் எழுதினர். 698 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ல் துவங்கியது; ஏப்., 8 வரை நடக்கிறது. கோவையில், 158 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில், நேற்று நடந்த ஆங்கில பாடத் தேர்வை, 39 ஆயிரத்து 988 மாணவர்கள் எழுதினர்; 698 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
தேர்வில், ஒரு மதிப்பெண் கேள்விகள் மட்டும் சிறிது கடினமாகக் கேட்கப்பட்டிருந்ததாகவும், மற்றபடி தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது என்றும், நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றும் மாணவ, மாணவியர் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆங்கில ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 25 சதவீதம் இது கடினமான தேர்வுதான். ஐந்து மற்றும் எட்டு மதிப்பெண் பிரிவுகளில், காம்ப்ரிஹென்சிவ் கேள்விகள் மாணவர்கள் புரிந்துகொள்ள சற்று சிரமமாக இருந்திருக்கும். 2 மதிப்பெண் கேள்விகளில் முக்கியமானவை என குறிப்பிடும் கேள்விகள் கேட்கப்படவில்லை. மற்றபடி கேள்விகள் அனைத்தும் எளிமையாகவே இருந்தன' என்றார்.

