/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாகம்மன் கோவிலில் 9ம் ஆண்டு விழா
/
நாகம்மன் கோவிலில் 9ம் ஆண்டு விழா
ADDED : ஜூலை 31, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் நாகம்மன் கோவிலில் ஆண்டு விழா நடக்கிறது.
கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் நாகம்மன் கோவிலில் வரும், ஆக., 5 மற்றும் 6ம் தேதியில், 9ம் ஆண்டு விழா நிகழ்சிகள் நடக்கிறது.
5ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, பொங்கல் வைத்தல் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு, காப்பு கட்டுதல், தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு, விநாயகர் பூஜை, அம்மனுக்கு மாங்கல்யம் அணிவித்தல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
ஆக., 6ம் தேதி, காலை 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், கலசம் முத்தரித்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு மகா தீர்த்த அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது.

