/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
350 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
/
350 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது
ADDED : மே 16, 2024 05:56 AM

தொண்டாமுத்தூர், : கெம்பனூரில் வீசிய காற்றில், 350 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.
தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் பஸ் ஸ்டாப் அருகில், 350 ஆண்டு பழமையான அரசமரம் இருந்தது. இந்த மரத்தை சுற்றிலும், திண்ணை அமைத்து பயன்படுத்தி வந்தனர்.
தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை, காற்று வீசியபோது, 350 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து, சாலையின் குறுக்கே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது மரத்தடி திண்ணையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்தது.
தகவல் அறிந்த மின்வாரியத்தினர் உடனடியாக அப்பகுதியில் மின்விநியோகத்தை துண்டித்தனர். விரைந்து வந்த வருவாய்த்துறையினர், மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், கெம்பனூர்- தாளியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.