/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டத்துடன் இணைந்தது குட்டி யானை!
/
கூட்டத்துடன் இணைந்தது குட்டி யானை!
ADDED : ஏப் 07, 2024 01:10 AM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் பிரிந்த குட்டி யானையை, மீண்டும் யானைக் கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை, கூட்டத்திலிருந்து பிரிந்து, அதே பகுதியில் சுற்றி வந்தது. இதை அறிந்த வனத்துறையினர், கோவை மாவட்ட வன அலுவலர் அறிவுரையின் பேரில், குட்டி யானையை மீண்டும் கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இளநீர், குளூக்கோஸ், பால் பவுடர் ஆகியவற்றை குட்டி யானைக்கு கொடுத்தனர். குட்டி யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டனர். வனச்சர ஊழியர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து, தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், நான்கு பெண் யானைகள், ஒரு குட்டியானை கூட்டம் அங்கிருந்த புளியந்தோப்பில் இருப்பதை கண்டறிந்து, குட்டி யானையை அக்கூட்டத்தில் இணைத்தனர்.
யானை கூட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில், பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

