/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கராத்தே வீரர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி
/
கராத்தே வீரர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி
கராத்தே வீரர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி
கராத்தே வீரர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : மே 16, 2024 05:51 AM

கோவை, : கராத்தே வீரர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி கண்ணம்பாளையத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
'எர்த் டிராகன் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியில்' கராத்தே பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கான கருப்பு பெல்ட் தேர்வு கண்ணம்பாளையம் புனித அடைக்கல மாதா திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் சர்வதேச மெய்புகான் கோஜூரியு கராத்தே டூ இந்தியா ஸ்டைல் கராத்தே பயிற்சி பெறும் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
நிஷோக், சாய்ராம், தனுஸ்ரீ, ஜீவா, காவியாஸ்ரீ, பிரனேஷ் ஆகிய 6 மாணவர்கள் கருப்பு பெல்ட் பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்கள் பாலசுப்பிரமணியம் நடராஜன், செந்துாரன், சர்வதேச மெய்புகான் கோஜூரியு கராத்தே டூ இந்தியா இயக்குனர் பார்த்திபன் ஆகியோர் கருப்பு பெல்ட் வழங்கினர். நிகழ்ச்சியில் பயிற்சியாளர் நாகசுந்தரம், சர்வதேச மெய்புகான் கோஜூரியு கராத்தே டூ இந்தியா நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.