/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்திரை பட்டத்தில் சோளம் பயிரிட அழைப்பு
/
சித்திரை பட்டத்தில் சோளம் பயிரிட அழைப்பு
ADDED : ஏப் 18, 2024 11:57 PM
கோவை;கோவை மாவட்டத்தில் சிறுதானிய பயிர்கள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் சோளம் சிறுதானிய உணவுகளில் முக்கிய உணவாக இருப்பதால் அதிகம் பயிரிடப்படுகிறது.சோளத்தின் பயன்பாட்டையும் சாகுபடி பரப்பினையும் அதிகரிக்க வேளாண் மற்றும் விதைச்சான்றளிப்புத் துறை இணைந்து, சோளப் பயிர்களில் விதைப் பண்ணைகளை அமைத்து, அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய, வீரியமிக்க விதைகளை உற்பத்தி செய்யும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சோளத்தில் சிறந்த ரகங்களான சிஒ-30, சிஒ-32 மற்றும் கே-12 ஆகிய ரகங்களை, சூலுார் வட்டாரத்தில் விதைப் பண்ணைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கண்ட ரகங்களில் சிஒ-32 காரிப் பருவத்துக்கு ஏற்ற ரகம். இப்பயிர் -110 நாட்களில் முதிர்ச்சியடையும் தன்மை கொண்டது.
இந்த சோளத்தில் விதைப்பண்ணை அமைக்கும்போது, விதைச்சான்று அலுவலரால் மூன்று முறை, அதாவது பயிர் வளர்ச்சி பருவம், பூப்பருவம் மற்றும் முதிர்ச்சி பருவங்களில் ஆய்வு செய்யப்படும்.
சான்று அளிக்கப்பட்ட விதைகளை வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக பெற்று விவசாயிகள் சித்திரைப்பட்டத்தில் சோளம் பயிரிடலாம்.இந்த தகவலை, கோவை விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

