/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராணுவ வீரரிடம் ரூ.18.76 லட்சம் பறித்த வழக்கு; மேலும் ஒருவர் கைது
/
ராணுவ வீரரிடம் ரூ.18.76 லட்சம் பறித்த வழக்கு; மேலும் ஒருவர் கைது
ராணுவ வீரரிடம் ரூ.18.76 லட்சம் பறித்த வழக்கு; மேலும் ஒருவர் கைது
ராணுவ வீரரிடம் ரூ.18.76 லட்சம் பறித்த வழக்கு; மேலும் ஒருவர் கைது
ADDED : மே 23, 2024 11:07 PM

பாலக்காடு;சைபர் மோசடி வாயிலாக, ராணுவ வீரரிடம் இருந்து ரூ.18.76 லட்சம் பறித்த வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச்சேர்ந்த ராணுவ வீரர், என்னிடம் வீட்டில் இருந்தபடி ஹோட்டல்களின் 'ஸ்டார் ரேட்டிங்' அளித்து பணம் சம்பாதிக்கலாம் என ஏமாற்றி, 18.76 லட்சம் ரூபாயை கும்பல் பறித்து விட்டதாக பாலக்காடு மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், சைபர் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராஜேஷின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அனுாப்மோன் தலைமையில் நடத்திய விசாரணையில், பொன்னானி, குற்றிப்புரம் மற்றும் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த மூவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆலுவா பகுதியைச் சேர்ந்த அன்வரை 42, கைது செய்தனர். அவர் பாலக்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அனுாப்மோன் கூறியதாவது:
இக்கும்பல், பல வங்கி உரிமையாளர்களை கைக்குள் போட்டு கொண்டு, இந்த மோசடியை நடத்தியுள்ளனர். இதற்கு, அவர்களுக்கு கமிஷனும் கொடுத்து வந்துள்ளனர்.
இதை செய்து வந்தது தற்போது கைதான அன்வர் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மூன்று மொபைல் போன்கள், ஏழு சிம் கார்டுகள், வை பை கருவிகள், பல்வேறு நபர்களின் பெயரில் உள்ள 12 ஏ.டி.எம்., கார்டுகள், 166 வெற்றுக்காசோலை, பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.