/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலை விளைபொருட்கள் சந்தைப்படுத்த மையம் அவசியம்
/
தோட்டக்கலை விளைபொருட்கள் சந்தைப்படுத்த மையம் அவசியம்
தோட்டக்கலை விளைபொருட்கள் சந்தைப்படுத்த மையம் அவசியம்
தோட்டக்கலை விளைபொருட்கள் சந்தைப்படுத்த மையம் அவசியம்
ADDED : ஆக 06, 2024 06:08 AM
பொள்ளாச்சி: தமிழகத்தின் பல பகுதிகளில், பழங்கள், காய்கறிகள், பூக்கள், நறுமணப் பொருட்கள், மலைப்பயிர்கள் உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன. இதுதவிர, பதப்படுத்தப்பட்ட பொருட்களான, ஜாம், ஜெல்லி, ஊறுகாய் உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றை சந்தைப்படுத்தவும், விற்பனையை அதிகரிக்கச் செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி சுற்றுப்பகுதி விவசாயிகள் சிலரும், இத்தகைய பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே, ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில், இத்தகைய பொருட்களை சந்தைப்படுத்த தோட்டக்கலை துறையால் விற்பனை நிலையம் துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், சிலர், ஜாதிக்காய் உள்ளிட்ட பல நறுமணப் பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். அவற்றை நல்ல விலைக்கு சந்தைப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலாத் தலங்களில் விற்பனை நிலையம் துவக்க வேண்டும்.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைத்துறை பண்ணைகளில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் மற்றும் நறுமணப் பொருட்களை தருவித்து, விற்பனை செய்ய வேண்டும். இதனால், உள்ளூர் விவசாயிகள் பயனடைவர். இவ்வாறு, கூறினர்.