/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை
/
விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை
விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை
விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை
ADDED : மார் 06, 2025 11:55 PM

கோவை; இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில், விபத்து காப்பீடு செய்தவரின் குடும்பத்துக்கு, ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இந்திய தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பல பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தபால் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், பிரத்யேகமாக விபத்து காப்பீட்டு பாலிசிகளை வழங்கி வருகிறது.
கோவை ரூட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சரவணகுமார், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில், 557 ரூபாய் செலுத்தி விபத்து காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில், அவர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர், 'ரூட்ஸ்' நிறுவன இயக்குனர் கவிதாசன் ஆகியோர் வழங்கினர். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மேற்கு மண்டல மேலாளர் பிரான்சிஸ் சேவியர், கிளை மேலாளர் பூபாலன், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன மண்டல மேலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.