ADDED : ஆக 02, 2026 06:10 PM
அ நிறம் | அளவு
கோவை: மண்டல தலைமை பொறியாளர் பணியிடம் கடந்த மூன்று மாதங்களாக காலியாக உள்ளது.
கோவை மின்பகிர்மான மண்டலத்தில் தலைமை பொறியாளராக சுரேஷ்குமார் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் சுமதி கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
கோவை மண்டலத்தின் கீழ் 7 வட்ட அலுவலகங்கள் உள்ளதால், ஏராளமான கோப்புகள் நிலுவையிலுள்ளன. ஆகவே விரைவில் தலைமை பொறியாளரை நியமிக்க வேண்டுமென்கின்றனர் பொதுமக்கள்.
