/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனத்தை உருவாக்கி கல்லுாரி மாணவி அசத்தல்
/
வாகனத்தை உருவாக்கி கல்லுாரி மாணவி அசத்தல்
ADDED : மே 23, 2024 02:23 AM
பழைய சக்கரங்கள், களிமண், அட்டைகளை கொண்டு, ராயல் என்பீல்டு' வாகனத்தை உருவாக்கி, தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார், 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவி.
'நிப்ட்-டீ' பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லுாரி மாணவ, மாணவியர், தங்கள் தனி திறமைகளை பல்வேறு முயற்சிகள் வாயிலாக நிரூபணம் செய்து வருகின்றனர்.
மூன்றாம் ஆண்டு 'காஸ்ட்யூம் டிசைனிங் அண்ட் பேஷன்' துறை மாணவி ஸ்ரீகமலி, களிமண், அட்டைகளை கொண்டு, பழைய சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி, 'ராயல் என்பீல்டு' வாகனத்தை வடிவமைத்து பிரமிக்க வைத்துள்ளார்.
கரிக்கோல், சுண்ணாம்பு கட்டி, வெள்ளை தாள், அட்டைகளை கொண்டு சிற்பம், பொன்மொழிகள், திருக்குறள், தேச தலைவர்கள் உருவப்படங்கள் உருவாக்கி, பாராட்டை பெற்றுள்ளார்.
இந்நிலையில், புதிய முயற்சியாக, வாகனத்தை, களிமண், அட்டைகள் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
மாணவி ஸ்ரீகமலி கூறுகையில்,''எனக்கு 'டூ வீலர்' இயக்க தெரியாது; இருப்பினும், வாகனத்தை வடிவமைத்து எனது ஆசையை பூர்த்தி செய்ய திட்டமிட்டேன். களிமண், அட்டைகளில் உருவத்தை உருவாக்கி, பெயின்ட், ஸ்பிரே, அக்ரிலிக் பெயின்ட் வாயிலாக, தத்ரூபமாக வாகனம் போலவே மாற்றியுள்ளேன்,'' என்றார்
.- நமது நிருபர் -

