/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
/
கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
ADDED : ஆக 20, 2024 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு எஸ்டேட் மூன்றாம் டிவிஷனை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது பசு மாடு நேற்று மேய்ச்சலுக்காக சென்ற போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
தகவல் அறிந்த தீயணைப்புத்துறை சிறப்பு நிலைய அலுவலர் பிரகாஷ்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், கயிறு கட்டி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.