/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாயில் விரிசல்; குடிநீர் விரயம் சீரமைக்காததால் மக்கள் அதிருப்தி
/
குழாயில் விரிசல்; குடிநீர் விரயம் சீரமைக்காததால் மக்கள் அதிருப்தி
குழாயில் விரிசல்; குடிநீர் விரயம் சீரமைக்காததால் மக்கள் அதிருப்தி
குழாயில் விரிசல்; குடிநீர் விரயம் சீரமைக்காததால் மக்கள் அதிருப்தி
ADDED : செப் 17, 2024 04:57 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் விரயமாகியது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஜமீன் ஊத்துக்குளி, வேட்டைக்காரன்புதுார், கம்பாலபட்டி, குறிச்சி, குனியமுத்துார் மற்றும், 295 கிராமங்கள் என கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதற்கான, 'பம்பிங்' ஸ்டேஷன்கள், அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இங்கு இருந்து கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு சென்று வினியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அம்பராம்பாளையத்தில் இருந்து, குளத்துார் செல்லும் வழித்தடத்தில் உள்ள, 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட பம்பிங் ஸ்டேஷனில் இருந்து, கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் விரிசல் ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விரயமாகிறது.
பம்பிங் ஸ்டேஷன் அருகிலேயே குடிநீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், விரிசல் அதிகரித்து பிரதான குழாயில் பாதிப்பு ஏற்படும்.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி செல்லும் ரோட்டில், போடிபாளையம் அருகே, ஒரு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல நாட்கள் குடிநீர் வீணாகி சாக்கடையில் சென்றது. பலமுறை புகார் தெரிவித்த பின், உடைப்பு ஏற்பட்ட இடத்தில், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, அம்பராம்பாளையம் - குளத்துார் ரோட்டில்,295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள விரிசலில், கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகிறது. பம்பிங் ஸ்டேஷன் அருகே இருந்தும் இதை சீரமைக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதனால், பல கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நீர் தடைபடும் சூழல் உள்ளது. நீர் விரயமாகுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
குடிநீர் பீய்ச்சியடைக்கும் இடத்தில், பொதுமக்கள் சார்பில் கல் வைத்து அடைத்துள்ளனர். அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

