/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைப்பொழிவு குறைந்தது ஆற்றில் நீர்வரத்து சரிந்தது
/
மழைப்பொழிவு குறைந்தது ஆற்றில் நீர்வரத்து சரிந்தது
ADDED : ஆக 06, 2024 06:22 AM

வால்பாறை: வால்பாறையில், மழைப்பொழிவு குறைந்ததால், ஆற்றில் நீர்வரத்து குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
வால்பாறையில், கடந்த மாதம் பெய்த தென்மேற்குப் பருவமழையால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, சோலையாறு அணை நிரம்பியது. இதையடுத்து, பரம்பிக்குளம் அணை நிரம்பி வருகிறது.
வால்பாறையில் பல்வேறு இடங்களில் மரம் மற்றும் மண் சரிந்து பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருவதால், வால்பாறை மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.07 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,189 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 2,412 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.
இதனால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 67.88 அடியாக உயர்ந்தது. அதிகபட்சமாக கீழ்நீராறு அணையில், 34 மி.மீ., மழை பெய்தது.