தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகிழ்ச்சி தான் முக்கியம் சொல்கிறார் நடிகர் சிவகுமார்

 மகிழ்ச்சி தான் முக்கியம் சொல்கிறார் நடிகர் சிவகுமார்

 மகிழ்ச்சி தான் முக்கியம் சொல்கிறார் நடிகர் சிவகுமார்


ADDED : பிப் 01, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை நகைச்சுவை சங்கம் மற்றும் டேனி ஷெல்டர்ஸ் சார்பில், 'வாங்க சிரிக்கலாம்' என்ற நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிவகுமார் பேசியதாவது:

பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த காலத்தில், என் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள நேரம் இல்லாமல் இருந்தேன். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் என் மகள், ஆசிரியர் பெற்றோர் கூட்டத்தில் கண்டிப்பாக வரவேண்டும் என்றார்.

இஷ்டமில்லாமல், பள்ளிக்கு சென்ற போது என்னைப் பார்த்தவுடன் என் மகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த மகிழ்ச்சிக்கு மேல் எவ்வளவு பணம், பொருள் இருந்தாலும் அதற்கு ஈடாகாது என நினைத்தேன். நுாற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த அக்னிசாட்சி படத்தில் அரவிந்தன் கதாபாத்திரம் மற்றும் சிந்து பைரவி படத்தில் ஜே.கே.பி. கதாபாத்திரத்தில் நடித்தது, காலம் கடந்து பேசப்படுகிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கோவை நகைச்சுவை சங்கத்தின் செயலாளர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us