/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடியில் பிரத்யேகமாக குழந்தைகள் பாதுகாப்பு மையம்
/
ஓட்டுச்சாவடியில் பிரத்யேகமாக குழந்தைகள் பாதுகாப்பு மையம்
ஓட்டுச்சாவடியில் பிரத்யேகமாக குழந்தைகள் பாதுகாப்பு மையம்
ஓட்டுச்சாவடியில் பிரத்யேகமாக குழந்தைகள் பாதுகாப்பு மையம்
ADDED : ஏப் 13, 2024 12:13 AM
கோவை;''கோவையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்,'' என, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கோவை லோக்சபா தொகுதி மற்றும் பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 3,096 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
ஓட்டு செலுத்துவதற்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் ஓட்டளிக்க வசதியாக, சக்கர நாற்காலி மற்றும் சாய்தள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
கைக்குழந்தைகளுடன் வரும் பெண் வாக்காளர்களுக்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள மையங்களில் பிரத்யேகமாக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, சாமியானா வசதி மற்றும் அமரும் இருக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வசதிகள் அனைத்தும், வாக்காளர்களின் நன்மைக்காகவே என்பதால், கோவை மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள், 19ம் தேதி தவறாமல் ஓட்டளிக்க வேண்டுமென, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

