/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தம்' அடிச்சா நாய் கடிக்காது... ஆமாம்...நம்பிதான் சார் ஆகணும்!
/
'தம்' அடிச்சா நாய் கடிக்காது... ஆமாம்...நம்பிதான் சார் ஆகணும்!
'தம்' அடிச்சா நாய் கடிக்காது... ஆமாம்...நம்பிதான் சார் ஆகணும்!
'தம்' அடிச்சா நாய் கடிக்காது... ஆமாம்...நம்பிதான் சார் ஆகணும்!
ADDED : ஜூன் 09, 2024 12:27 AM

புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பேரணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தமிழகமெங்கும் நடத்தப்பட்டன. கோவையிலும் நடந்தது.
இதில் சொல்லப்பட்ட ஒரு விழிப்புணர்வு கருத்து, அதிர்ச்சி தந்தது. இந்தியாவில் கடந்தாண்டு, அதிகபட்சமாக உ.பி.,யில் புதிதாக 2.1 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டது.
அடுத்ததாக, மகாராஷ்டிரா 1.21 லட்சம், புது புற்றுநோய் பாதிப்பு, மேற்கு வங்கம் 1.13 லட்சம், பீகார் 1 லட்சம், தமிழகம் 82 ஆயிரம் பேருக்கு புது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இத்தனைக்கும் காரணம், புகையிலை பயன்பாடு!
இதை நினைக்கும் போது நினைவுக்கு வந்தது ஒரு கதை...
நண்பனுக்கு ஒருவர் சிகரெட் கம்பெனியில் வேலை வாங்கித் தருகிறார். சிகரெட் விற்க, பல்வேறு ஊர்களுக்கு செல்கிறார். அவர் சென்ற இடங்கள் எல்லாம்... சிகரெட் பிடிக்காத மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு.
இது சரிபட்டு வராது; எனக்கு ஊதியமும் கிடைக்காது என்று நினைத்து ஒரு முடிவுக்கு வருகிறார். மறுபடியும், அந்த கிராமங்களுக்கு சென்று, மூன்று உத்தரவாதம் தருகிறார்.
1. சிகரெட் பிடிச்சா உங்க வீட்டுக்கு திருடன் வரமாட்டான்.
2. சிகரெட் பிடிச்சா உங்களை நாய் கடிக்காது.
3. சிகரெட் பிடிச்சா உங்களுக்கு முதுமையே வராது!
இதை கேட்டு, பலர் சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். விற்பனை களை கட்டுகிறது. இதை தன் நண்பனிடம் பகிர்ந்து கொள்கிறார்.
என்னடா... சிகரெட் பிடிச்சா புற்றுநோய் வரும். ஆனா, நீ மாத்தி, மாத்தி சொல்லிட்டு வந்திருக்கே என கடிந்து கொண்டார்.
நான் சொன்னது உண்மை தான் என்று, அதற்கான காரணமும் விளக்கினார் நண்பர்.
1. சிகரெட் குடிச்சு, குடிச்சு, நைட்டெல்லாம் இருமிட்டே இருப்பாங்க. வீட்ல திருட வர்றவங்க, அட... வீட்ல ஆள் இருக்குதுன்னு போயிருவாங்க!
2. சிகரெட் குடிச்சு, குடிச்சு, நடக்கவே சிரமப்படுவாங்க. குச்சி வெச்சு தான் நடக்க முடியும். குச்சி வெச்சிருந்தா, எப்படி நாய் கடிக்கும்?
3. சிகரெட் குடிச்சு, குடிச்சு, சின்ன வயசுலேயே இறந்து போயிருவாங்க. அப்புறம் எப்படி முதுமை வரும்
- இப்படி சொல்லி முடித்தபோது, நண்பர் அசந்து போனார்.