/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது அருந்தியவர் தவறி விழுந்து பலி
/
மது அருந்தியவர் தவறி விழுந்து பலி
ADDED : ஜூன் 05, 2024 09:40 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு - சொலவம்பாளையம் ரோட்டில் உள்ள தரை பாலத்தில் அமர்ந்து, மது அருந்தியவர் தவறி விழுந்து இறந்தார்.
கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 42, தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், 5ம் தேதி ஆர்.எஸ்., ரோடு அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் 'சரக்கு' வாங்கி, சொலவம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள தரை பாலத்தில் அமர்ந்து அருந்தியுள்ளார். பேதையில், தரை பாலத்தில் தவறுதலாக சாய்ந்ததில் கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தது.
அவ்வழியில் சென்றவர்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த நிலையில் உடலை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.