/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு
/
ரோட்டில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 08, 2024 12:22 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் ரோட்டில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு, பட்டணம் - செட்டியக்காபாளையம் செல்லும் ரோட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரோட்டோரத்தில் இருந்த மரம், காற்றுக்கு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. அவ்வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது.
இதனால் பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் இவ்வழித்தடத்தில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மரம் விழுகும் பொழுது அருகாமையில் ஆட்கள் யாரும் செல்லாததால், விபத்து தவிர்க்கப்பட்டது. ரோட்டில் விழுந்த மரம் மறுநாள் வெட்டி அகற்றப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'ரோட்டின் ஓரத்தில் பழமையான மரங்கள் உள்ளன. இதில், சில மரத்தின் கிளைகள் ரோட்டில் தொங்கியவாறு உள்ளன. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டோரத்தில் தொங்கியவாறு இருக்கும் மரக்கிளையை அகற்றம் செய்ய வேண்டும்,' என்றனர்.