/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் சரிந்த மரம்; மின்கம்பிகள் சேதம்
/
ரோட்டில் சரிந்த மரம்; மின்கம்பிகள் சேதம்
ADDED : ஜூலை 17, 2024 12:43 AM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்த மரம், மழைக்கு சரிந்து ரோட்டில் விழுந்தது.
கிணத்துக்கடவு, தேரோடும் வீதியில் அரசு மருத்துவமனை அருகே உள்ளது பி.எஸ்.என்.எல்., அலுவலகம். இந்த அலுவலகம் கடந்த சில மாதங்களாக முறையான பராமரிப்பு இன்றி இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காற்றுடன் பெய்த மழையால், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இருந்த மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதில், மின் கம்பிகள் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் தடைபட்டது.
இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள், மின் துறை பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பணியாளர்கள் மரத்தை அகற்றி, மின் இணைப்பை சரி செய்தனர்.
ஆனால், சரிந்த மரம் மட்டும் ரோட்டின் அருகே கிடந்தது. இது குறித்து பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தெரிவித்தும் மரம் அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.