/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொது இடத்தில் குப்பை கொட்டிய காபி கடைக்கு ரூ.2,000 அபராதம்
/
பொது இடத்தில் குப்பை கொட்டிய காபி கடைக்கு ரூ.2,000 அபராதம்
பொது இடத்தில் குப்பை கொட்டிய காபி கடைக்கு ரூ.2,000 அபராதம்
பொது இடத்தில் குப்பை கொட்டிய காபி கடைக்கு ரூ.2,000 அபராதம்
ADDED : மார் 28, 2024 05:17 AM
கோவை, : சவுரிபாளையம் அருகே பொது இடத்தில் குப்பை கொட்டிய காபி கடைக்கு, ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, குப்பை தொட்டிகள் வைக்கப்பட்ட இடங்களில் தரம் பிரிக்காது குப்பை கொட்டுவதை தவிர்க்க, படிப்படியாக குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு, துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மாநகராட்சி, 53வது வார்டு, சவுரிபாளையம் அருகே ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்குமாறு, மாநகராட்சி சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், அதை பொருட்படுத்தாமல், நேற்று குப்பை கொட்டிய காபி கடை உரிமையாளருக்கு, சுகாதார பிரிவினர் ரூ.2,000 அபராதம் விதித்து எச்சரித்தனர்.