/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலையாறு அணை பகுதியில் தீயணைப்பு நிலையம் தேவை
/
சோலையாறு அணை பகுதியில் தீயணைப்பு நிலையம் தேவை
ADDED : ஆக 20, 2024 10:14 PM
வால்பாறை : சோலையாறு அணைப்பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பில், அடிக்கடி மின் கசிவு ஏற்பட்டு, வீடுகள் தீயில் சேதமடைந்தன. இதனால், பல லட்சம் மதிப்பிலான பொருட்களை இழந்து மக்கள் தவித்தனர்.
இது போன்ற சூழ்நிலையில், வால்பாறை நகரிலிருந்து தொலை துார எஸ்டேட் பகுதிக்கு, குறிப்பாக பன்னமேடு, உருளிக்கல், முருகாளி, கல்யாணப்பந்தல், புதுக்காடு, ேஷக்கல்முடி, சோலையாறு அணை பகுதிக்கு, தீயணைப்பு வாகனம் செல்வதற்குள் தீவிபத்து அதிகரித்து, சேதமும் பெரிய அளவில் ஏற்படுகிறது.
ேஷக்கல்முடி, புதுக்காடு எஸ்டேட் தொழிலாளர்கள் கூறிகையில், 'வால்பாறையில் இருந்து, 40 கி.மீ., தொலைவில் வசிக்கிறோம். திடீர் தீ விபத்து ஏற்பட்டால், வால்பாறை நகரில் இருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டும்.
இதனால், தீ விபத்தின் போது அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. தொழிலாளர்களின் நலன் கருதி சோலையாறு அணைப்பகுதியில் கூடுதலாக தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும்,' என்றனர்.

