/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இழுத்தடிக்குது மின்வாரியம்; கிராம சபையில் சரமாரி புகார்
/
இழுத்தடிக்குது மின்வாரியம்; கிராம சபையில் சரமாரி புகார்
இழுத்தடிக்குது மின்வாரியம்; கிராம சபையில் சரமாரி புகார்
இழுத்தடிக்குது மின்வாரியம்; கிராம சபையில் சரமாரி புகார்
ADDED : ஆக 15, 2024 11:56 PM
கோவில்பாளையம்: 'பணம் செலுத்தி ஐந்து மாதங்கள் ஆகியும், தெருவிளக்கு பொருத்தாமல், மின்வாரியம் இழுத்தடிக்கிறது,' என கிராம சபையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
சர்க்கார் சாம குளம் வட்டாரத்தில், ஏழு ஊராட்சிகளில், நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கள்ளிப்பாளையம் ஊராட்சி கூட்டம் நஞ்சுண்டாபுரத்தில் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஆனந்தி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகிகள் பேசுகையில், 'கள்ளிப்பாளையம் ஊராட்சியில், 250 தெரு விளக்குகள் பொருத்த, கடந்த மார்ச் மாதம் மின்வாரியத்திற்கு 12 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. ஐந்து மாதங்கள் ஆகியும் தெரு விளக்குகள் பொருத்தவில்லை. மக்கள் இருளில் தவிக்கின்றனர், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்,' என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
மின்வாரிய போர்மேன் கோபால கிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் தெரிவித்தார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்