/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிய முழு உடல் பரிசோதனை அவசியம்
/
ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிய முழு உடல் பரிசோதனை அவசியம்
ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிய முழு உடல் பரிசோதனை அவசியம்
ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிய முழு உடல் பரிசோதனை அவசியம்
ADDED : மார் 29, 2024 12:39 AM
''முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, பல்வேறு நோய் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெறலாம்,'' என்கின்றனர், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, முழு உடல் பரிசோதனை மைய மருத்துவ ஆலோசகர்கள் ஜோசப், ஸ்மித்தா அசோக்.
அவர்கள் கூறியதாவது:
உடலில் நோய் தாக்குவதற்கான அறிகுறிகள் உள்ளனவா? என்ன நோய் தாக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய உதவுவதே, முழு உடல் பரிசோதனை. உடல் உழைப்பின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும், 35 வயதுக்கு மேற்பட்டோர், தங்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்றாலும், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ளோர், நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய விரும்புவோர், புகை, மது பழக்கம் உள்ளோர், சர்க்கரை பாதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை, அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை, குடும்பத்தில் யாருக்காவது இருதய நோய் வந்திருந்தால் அவர்களின் வாரிசுகள், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
இப்பரிசோதனையால், தொடக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை கண்டறிந்து உரிய சிகிச்சையை உடனடியாக பெறலாம். இப்பரிசோதனை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டு, அன்றே அறிக்கையையும் பெற்றுக் கொள்ளலாம்.
சிறுநீர், ரத்தம், மலம், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனைகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈ.சி.ஜி., டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம், பெண்களுக்கு மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள், கே.எம்.சி.எச்.,ல் மேற்கொள்ளப்படுகின்றன.
ரத்த சோகை, ரத்த புற்றுநோய், நீரிழிவு, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, இருதயத்தின் இயங்கும் தன்மை, ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், கல்லீரல், மார்பக புற்றுநோயை கண்டறியலாம்.
கே.எம்.சி.எச்.,ல் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கு வருவோர், காலையில் காபி, டீ உள்ளிட்ட எதுவும் உட்கொள்ளாமல் வரவேண்டும். ஏதாவது நோய் பாதிப்புக்கு மருந்து, மாத்திரை உட்கொள்பவராக இருந்தால், அது குறித்த விவரங்களை கொண்டு வரவேண்டும்.
தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பொருத்தமான பிரத்யேக முழு உடல் பரிசோதனை திட்டங்களும் இங்கு உள்ளன. முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு: 73393 33485.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

