கோவை, : கோவையில், பல்வேறு அமைப்புகள் சார்பில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில், அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கவுரி சங்கர் தலைமையில், விழா நடந்தது. பண்ணாரியம்மன் காட்டன் டிரேடர்ஸ் நிறுவனர் செந்தில் குமார் தேசியக்கொடி ஏற்றினார்.
நூலகர் லட்சுமணசாமி, பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார். சம்பத், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நுாலகர்கள் பிரபு, மரிய டெய்சி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் சுஜன் விமல் ராஜ் நாகராஜ், சரவணன், ராக்கேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
n அண்ணா அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், மார்க்கெட் சங்க தலைவர் சந்திரன் தலைமையில், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா, தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் கனகராஜ், பொருளாளர் அப்துல் சமது, மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
n பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சார்பாக, தாளாளர் சண்முகம், தேசியக்கொடி ஏற்றினார். மாணவர்களுக்கு கால்பந்து, கிரிக்கெட், கபடி, மாணவியருக்கு த்ரோபால், இறகு பந்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர்.
n கோவை எஸ்.என்.எஸ்., கல்வி குழுமங்களை சார்ந்த அனைத்து கல்லூரிகளிலும், தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
n கோவை நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி சார்பில், முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், சுதந்திரதின விழா குறித்து பேசினார். மாணவர் பேரவைத்தலைவர் சித்தார்த் கோபால் வரவேற்றார். கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திவ்யா, தேசியக்கொடி ஏற்றினார். மானஸா நன்றிகூறினார்.
n ஆர்.எஸ்.புரம் கிளப்பில் நடந்த விழாவில், தலைவர் கருமுத்து தியாகராஜன், செயலாளர் திலீப் ஷா, பொருளாளர் புரந்தரதாஸ், குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், செல்வன், விஜய் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர்.
n கோவை இடிகரை மவுண்டன் வியூ குடியிருப்பில், தேசியக்கொடி ஏற்றப்பட்டது. விளையாட்டு உபகரணங்களை, தொழிலதிபர் ராஜா வழங்கினார். அருணாச்சலம், தணிகாசலம், புகழேந்தி, நிஷாந்த், ராஜம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
n துடியலுார் அடுத்த தொப்பம்பட்டி டி.ஜி.கே., நகரில், முன்னாள் ராணுவ வீரர் சகாதேவன், தேசியக்கொடி ஏற்றினார். குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். நகரின் அறிவிப்பு பலகையை, முதல் நிலை உறுப்பினர் சுப்பிரமணியம் திறந்து வைத்தார். போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
n கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்கு உட்பட்ட வி.ஆர். லே-அவுட் பகுதியில், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, தேசியக் கொடியேற்றினார். துாய்மை இந்தியா குறித்து பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்துல் கலாம் மரம் நடும் சங்க நிர்வாகிகள் விஜயன், சாமிநாதன், பதிராஜ், ஆறுச்சாமி, மகேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
n கோவை டாடாபாத் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடந்த விழாவில், தலைமை பொறியாளர் (பொ) சுப்ரமணியம், தேசியக் கொடியேற்றினார். மேற்பார்வை பொறியாளர் (மெட்ரோ) சதீஷ்குமார், மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) விஜயகவுரி மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

