/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு நுாலகத்துக்கு காத்திருக்கு பரிசு
/
வீட்டு நுாலகத்துக்கு காத்திருக்கு பரிசு
ADDED : ஆக 31, 2024 12:43 AM
கோவை;கோவையில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நுாலகங்களில், மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நுாலகத்தை தேர்ந்தெடுத்து, ரூ.3,000 மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.
தங்களது இல்லத்தில் நுாலகம் அமைத்து பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள், தங்களது நுாலகத்தில் உள்ள நுால்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரம், தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன், செப்., 30க்குள் மாவட்ட நுாலக அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட நுாலக அலுவலர், 1232 பெரிய கடை வீதி, கோவை-1 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அல்லது, dlocbe1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது, அருகாமையில் உள்ள பொது நுாலக இயக்கக நுாலகத்தில் நேரில் விண்ணப்பம் கொடுக்கலாம் என, கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.