தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்கள் பார்வைக்கு வழிகாட்டி பதிவேடு

மக்கள் பார்வைக்கு வழிகாட்டி பதிவேடு

மக்கள் பார்வைக்கு வழிகாட்டி பதிவேடு


ADDED : ஜூன் 13, 2024 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 11:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி : வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, அவற்றை பார்த்து, 15 நாட்களுக்குள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை வருமாறு:

கோவை மாவட்டத்தில் உள்ள, வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரித்து, மக்கள் பார்வையிடும் வகையில் தாசில்தார், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் விபரங்கள், www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது, ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், 15 நாட்களுக்குள் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம், 'மாவட்ட கலெக்டர்/ தலைவர், மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோவை மாவட்டம்' என்ற முகவரியில், நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அளிக்கலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us