/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரோக்கியம் நிறைந்த ஹெர்பல் டீ ட்விஸ்ட் ; கீரைகடை.காம் அறிமுகம்
/
ஆரோக்கியம் நிறைந்த ஹெர்பல் டீ ட்விஸ்ட் ; கீரைகடை.காம் அறிமுகம்
ஆரோக்கியம் நிறைந்த ஹெர்பல் டீ ட்விஸ்ட் ; கீரைகடை.காம் அறிமுகம்
ஆரோக்கியம் நிறைந்த ஹெர்பல் டீ ட்விஸ்ட் ; கீரைகடை.காம் அறிமுகம்
ADDED : மே 15, 2024 12:58 AM
கோவை;கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கீரைக்கடை.காம், கீரை வகைகளை அதன் ஊட்டச்சத்துகள் குறையாமல் சூப், பிஸ்கட்ஸ் போன்ற பல்வேறு வகை உணவுப் பொருட்களாக விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனம், அதன் புதிய 'ஹெர்பல் டீ ட்விஸ்ட்' எனும் மூலிகை பூ டீ தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தயாரிப்பை சின்னத்திரை புகழ், ஈரோடு மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து கீரைக்கடை.காமின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் கூறியதாவது:
செம்பருத்தி, சாமந்தி மற்றும் சங்கு பூ என மூன்று வகையான, தேநீர்கள் அடங்கிய, ஹெர்பல் டீ ட்விஸ்ட் தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செம்பருத்தி, சாமந்தி மற்றும் சங்கு பூ ஆகிவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட டீ இதழ்களை சூடான பானமாக அல்லது குளிர் பானமாக உட்கொள்ளலாம்.
துாக்கத்தை மேம்படுத்துல், மன அழுத்தத்தை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 99947 69898 என்ற எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.