/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியோர் இருக்கும் வீடு இப்படித்தான் இருக்கணும்!
/
முதியோர் இருக்கும் வீடு இப்படித்தான் இருக்கணும்!
ADDED : ஏப் 21, 2024 01:20 AM

முதியோர் உள்ள வீடுகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது மிக அவசியம். கட்டமைப்பு பணிகளில் கவனம் செலுத்த தவறிவிட்டால், அவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படும் என்கின்றனர் இன்ஜினியர்கள்.
n வீட்டில் முடிந்தவரை, பெரியோருக்கான அறையில் மட்டுமாவது, வழுக்கும் நிலையில் உள்ள டைல்ஸ் தவிர்ப்பது நல்லது. பாத்ரூமில் உள்ள தண்ணீரில் வழுக்கி, கீழே விழுபவர்களே அதிகம் என்பதால், வழுக்காத நிலையில் உள்ள டைல்ஸ் பதிக்கலாம். ஏற்கனவே கட்டிய வீடாக இருந்தால், டைல்ஸ் மேலே ஒட்டிக்கொள்ளும், சொரசொரப்பான சீட்கள் கடைகளில் கிடைக்கின்றன.
n தற்போது வீடு கட்டும் பலர், முதியோர்களை கருத்தில் கொண்டு வெஸ்டர்ன் பாத்ரூம் அமைக்கின்றனர். இதன் பக்கவாட்டில் தாங்கி பிடிக்க, இரும்பு கைப்பிடிகளை அமைக்கலாம். பிரத்யேக பாத்ரூம் அமைப்பதாக இருந்தால், பெரியோருக்கு எட்டும் உயரத்தில், துணி போடும் கம்பிகள், சோப்பு வைப்பதற்கான 'ஸ்லாப்' இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
n வீல் சேர் பயன்படுத்துவோர், வெளியே செல்லும் போது வசதியாக இருப்பதற்கு, சறுக்குத்தளம் அமைக்க வேண்டும். வீட்டிற்குள்ளே பிற இடங்களுக்கு எளிதில் செல்வதற்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டும்.
n முதியோர் இருக்கும் வீடுகளில், படிக்கட்டுகளின் உயரம் சற்று குறைவாகவும், அகலமாகவும் இருப்பது அவசியம். குறுகிய படிக்கட்டுகளில் ஏறும்போது தடுமாற்றம் வரலாம்.
n தனிவீடாக இருந்தால், வீட்டிற்கு வெளியே சிறிய திண்டு அமைப்பது அவசியம். காலை, மாலை நேரங்களில், வெளியே அமரும் போது, மன அழுத்தம் குறையும். நண்பர்களுடன் அமர்ந்து பேச வசதி இருந்தால், வீட்டிற்குள்ளே அடைப்பட்டு கிடப்போர், ரிலாக்ஸாக உணருவர்.
n வீட்டை சுற்றிலும் இடம் இருந்தால், ஓடு தளம் அமைக்கலாம். வெளியிடங்களில் நீண்ட நேரம் வாக்கிங் செல்ல முடியாதவர்களுக்கு, பயிற்சி எடுக்க பயனுள்ளதாக இருக்கும்.
n முதியோர் தனியாக உள்ள வீடுகளில், சி.சி.டி.வி., கேமரா இருப்பது மிக அவசியம். வெளியாட்கள், தெரியாத நபர்கள் வீட்டிற்குள் வந்தால், தகவல் தெரிவிக்கும் வகையில், வாய்ஸ் ரெக்கார்டு வசதி இருந்தால், அவ்வப்போது தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளலாம்.

