/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலி
/
விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலி
ADDED : ஆக 11, 2024 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு,34; ஊர்க்காவல் படை வீரர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணியளவில் பீளமேடு எஸ்.எஸ்.ஐ., ரவியுடன் பைக்கில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அவிநாசி ரோடு கொடிசியா அருகே சென்றபோது, பின்னால் வந்த ஒரு கார், பைக் மீது மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.
இதில், பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த எஸ்.எஸ்.ஐ., ரவியை வாகன ஓட்டிகள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சி பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

