/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு, மனை, வில்லா... வங்கிக் கடன் தர்றாங்க நல்லா!
/
வீடு, மனை, வில்லா... வங்கிக் கடன் தர்றாங்க நல்லா!
ADDED : ஆக 18, 2024 12:57 AM

யாருக்குத்தான் இல்லை சொந்த வீட்டுக் கனவு. நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனம், சட்டப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட மனைகள், நமக்கு விருப்பமான இடத்தில், தகுந்த பட்ஜெட்டில் கிடைக்க வேண்டும். எளிதில் அணுகக் கூடிய இடம், வாஸ்து என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்வதற்கான இந்தத் தேடல் பெரும் அலைச்சலைத் தரும்.
இவையெல்லாவற்றையும் ஒரே இடத்தில் காண முடிந்தால்... அதுதான் 'தினமலர்' பில்டு எக்ஸ்போ. இந்த பிரத்யேக அரங்கில், 10க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றக் காத்திருக்கின்றன.
பிரீமியம் அபார்ட்மென்ட்கள், வில்லாக்கள், லக்ஸுரி ஸ்பேஸ்கள், தனி வீடு, முதலீட்டுக்காக மனைகள், பரபரப்பான நகருக்கு மிக அருகே, இரைச்சலற்ற ஓய்வெடுக்க வசதியான ஊரகம் என எல்லாவிதத்திலும் வெவ்வேறு சாய்ஸ்களுடன் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் வகையில் சேவை செய்ய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. உங்கள் கனவை நனவாக்க நிதியுதவி வேண்டாமா? அதற்கும் வழி செய்யப்பட்டிருக்கிறது கண்காட்சியில். முன்னணி பொதுத்துறை வங்கிகள் உட்பட தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஸ்டால்கள் அமைத்துள்ளன. எஸ்.பி.ஐ., பரோடா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ரெப்கோ, டி.பி.எஸ்., வங்கி என வங்கிச் சேவைகள் வரிசை கட்டி நிற்கின்றன. இவ்வங்கிகள், 85 சதவீதம் வரை வீட்டுக் கடன், 90 சதவீதம் வரை வாகனக் கடன் குறைந்த வட்டி வீதத்தில் தருகின்றன.
சிட்பண்ட்டில் சேமிக்க விரும்புவோருக்காக, தனலட்சுமி சீனிவாசன் சிட் பண்ட்ஸ் நிறுவனம் ஸ்டால் அமைத்திருக்கிறது. பல்வேறு வங்கிக் கடன்களைப் பெற்றுத் தரும் பாலலெட்சுமி ஏஜென்சீஸ் நிறுவனமும் ஸ்டால் அமைத்திருக்கிறது.
வீடு, வாகனக் கடன் மட்டுமின்றி, நகைக்கடன், தனி நபர் கடன்களையும் பெறலாம். சில வங்கிகளின் ஸ்டால்களில், 5 நிமிடத்தில் வங்கிக் கணக்கைத் துவக்கித் தரும் வசதியையும் செய்து தருகின்றன.