/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமாட்சிபுரி ஆதினம் குருபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
/
காமாட்சிபுரி ஆதினம் குருபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
காமாட்சிபுரி ஆதினம் குருபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
காமாட்சிபுரி ஆதினம் குருபூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
ADDED : மார் 05, 2025 03:24 AM
கோவை:கோவை காமாட்சிபுரி ஆதினம் குருபூஜை விழாவில், திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் முதலாமாண்டு குருபூஜை விழா, ஒண்டிப்புதுார் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள, 51 சக்தி பீடம் கோவிலில் நடந்தது. காலையில் திருவிளக்கு வழிபாடு, திருமுறை வேள்வி வழிபாடு அடுத்து, 108 சங்காபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
விழாவில் திருமுறை வேள்வி மலரை, தற்போதைய ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் வெளியிட்டார். ஆன்மிக நெறியாளர்கள், தொழிலதிபர்கள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளில் இருக்கும் பக்தர்கள் பங்கேற்றனர்.