தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஐந்து நாட்களுக்கு லேசாக தூறலாம்!

ஐந்து நாட்களுக்கு லேசாக தூறலாம்!

ஐந்து நாட்களுக்கு லேசாக தூறலாம்!


ADDED : ஆக 27, 2024 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 10:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;கோவை மாவட்டத்தில் இன்று முதல் செப்.1ம் தேதி வரை மிக லேசான தூறல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் சற்று அதிகரித்து 80 சதவீதமாக இருக்கும். காற்றின் வேகம் கடந்தவாரத்தை விட குறைவாக, சராசரியாக மணிக்கு 18 கி.மீ., என்ற அளவில் இருக்கும்.

வரும் 5 நாட்களில் மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தூறல் அல்லது லேசான மழையை எதிர்பார்க்கலாம்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, வரும் 31ம் தேதி, ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் முறையே 10 மி.மீ., மற்றும் 9 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இத்தகவலை, கோவை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய முதன்மை அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us