/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பட்டய கணக்காளர் படிப்பு படித்தால் ஏராள வாய்ப்புகள்'
/
'பட்டய கணக்காளர் படிப்பு படித்தால் ஏராள வாய்ப்புகள்'
'பட்டய கணக்காளர் படிப்பு படித்தால் ஏராள வாய்ப்புகள்'
'பட்டய கணக்காளர் படிப்பு படித்தால் ஏராள வாய்ப்புகள்'
ADDED : ஆக 19, 2024 12:37 AM
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், வணிகவியல் (பி.ஏ.,) துறையின் மாணவர் மன்ற துவக்க விழா, கல்லூரி அரங்கத்தில் நடந்தது.
துறை தலைவர் பிருந்தா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். திருப்பூர் ஆடிட்டர் மகேஸ்வரன் விஷ்ணுகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர் மன்றத்தை துவக்கி வைத்தார்.
கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆடிட்டர் மகேஸ்வரன் விஷ்ணுகுமார் பேசுகையில், மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்த பின், ஏராளமான வாய்ப்புகள் தொழில் ரீதியாக வணிகவியல் துறை மாணவர்களுக்கு உள்ளது. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, எதிர்காலத்தில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.
பட்டய கணக்காளர் தேர்ச்சி முடித்தால், நிறுவன பணியில் இருந்து ஆரம்பித்து, மருத்துவத்துறை வரை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ''இதற்கு மாணவர்கள் சுயமரியாதையுடனும், உடல் ரீதியாக பலமானவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம், என்றார்.