/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அ' குறுமைய தடகளம் மாணவர்கள் அமர்க்களம்
/
'அ' குறுமைய தடகளம் மாணவர்கள் அமர்க்களம்
ADDED : ஆக 18, 2024 10:43 PM

கோவை:பள்ளிக்கல்வித்துறையின், 'அ' குறுமைய தடகள போட்டியில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, 'அ' குறுமைய தடகளப் போட்டிகள், அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளி சார்பில், நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
மாணவ- மாணவியருக்கு, 14, 17, 19 ஆகிய மூன்று வயது பிரிவுகளின் அடிப்படையில், 100மீ, 200மீ, 400மீ, 600மீ, 800மீ, 1500மீ ஓட்டம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல் உட்பட, போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியர், மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.