/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
46 கிராமங்களில் 5,300 மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி
/
46 கிராமங்களில் 5,300 மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி
46 கிராமங்களில் 5,300 மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி
46 கிராமங்களில் 5,300 மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி
ADDED : மே 20, 2024 10:51 PM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டத்தில் 46 கிராமங்களில் 5,300 மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடக்கின்றன.
இதுகுறித்து, கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெருமாள்சாமி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2024--2025ம் ஆண்டில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராமங்களாக, 46 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் விவசாய நிலங்களில் 5,300 மண் மாதிரிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு மற்றும் வேளாண் துறையினர் மட்டும் பயன்படுத்தும் வகையில், மண் வள அட்டை என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், மண் பரிசோதனை செய்ய உள்ள நிலத்தில், விவசாயிகள் பெயர், தொலைபேசி எண், இடத்தின் சர்வே எண், முன்பு சாகுபடி செய்த பயிர், அடுத்து சாகுபடி செய்ய உள்ள பயிர், போன்ற பல்வேறு விவரங்களை அலுவலர்கள் பதிவிட வேண்டும்.
மேலும், விவரங்களை உழவர் செயலி மற்றும் தமிழ் மண்வளம் என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
---

