/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி காத்திருப்பு போராட்டம்
/
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 06, 2024 06:08 AM
ஆனைமலை: ஆனைமலை அருகே, காளியாபுரம் ஊராட்சி கே.பி.எம்., காலனி மக்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை அருகே, காளியாபுரம் ஊராட்சி கே.பி.எம்., காலனியில், ஊராட்சி தலைவர் ஜெயசாந்தி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உபரி நிலத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நரிக்கல்பதியில் குடியிருக்கும், 62 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். வழித்தட வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
வருவாய்துறை அதிகாரிகள், ஆனைமலை போலீசார், பேச்சு நடத்தினர். தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள இடப்பிரச்னை சம்பந்தமாக, 20 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.