/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு படத்தை கவிதை மாதிரி சொல்லி விட வேண்டும்! 'கெவி' திரைப்பட ஒளிப்பதிவாளர் கூறுகிறார்
/
ஒரு படத்தை கவிதை மாதிரி சொல்லி விட வேண்டும்! 'கெவி' திரைப்பட ஒளிப்பதிவாளர் கூறுகிறார்
ஒரு படத்தை கவிதை மாதிரி சொல்லி விட வேண்டும்! 'கெவி' திரைப்பட ஒளிப்பதிவாளர் கூறுகிறார்
ஒரு படத்தை கவிதை மாதிரி சொல்லி விட வேண்டும்! 'கெவி' திரைப்பட ஒளிப்பதிவாளர் கூறுகிறார்
ADDED : ஆக 31, 2024 11:15 PM

ஒளிப்பதிவு என்றால், பாலுமகேந்திரா பெயர் தான் என்றென்றும் நினைவில் நிற்கும். நீண்டகாலமாக இருந்த வழக்கங்கள் மாற்றி, 'அட... அந்தக் காட்சியில ஒளிப்பதிவு எப்படி இருந்துச்சு பாரேன்' என்று பேசும் அளவுக்கு, இவர், இந்த பாதையில் கதவு திறந்து வைத்தவர்.
'பாலுமகேந்திரா சென்ற பாதை அவ்வளவு அழகானது... அதை பார்த்தாலே போதும்; பயணித்தால் இன்னும் ஜொலிக்கலாம்... ஒளிப்பதிவாளராக ஆசையிருக்கும் எல்லோருக்கும் அது பாடம் கற்றுத் தரும்' என்கிறார், 'கெவி' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உருவாகி வருகிறது இப்படம்.
'கெவி' திரைப்படத்தின் அனுபவம் குறித்து அவர் பேசியதில் இருந்து...!
ஒரு புகைப்படம் எடுக்கிறோம் என்றால், அதை கவிதை மாதிரி சொல்லி விட வேண்டும். வீடியோவால், அதில் இருக்கும் உணர்வுகளை சொல்ல முடியும். சுமார் 60 காட்சிகளை கொண்டு படமாக்கும் போது, காட்சிப்படுத்தும் போது, அந்த காட்சிக்குள் என்ன தேவை என்று பார்க்க வைப்பதில், ஒளிப்பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.
கதைக்கு என்ன தேவை என்ற அழகியலை தாண்டி, அதன் யதார்த்தம், குறிப்பிட்ட ஒரு காட்சியில் அந்த கதாபாத்திரத்துக்கு ஒரு 'எமோஷன்' இருக்கும். இதை கண்டுபிடித்து ஷாட் வைப்பதில் தான், ஒளிப்பதிவாளரின் முக்கியத்துவம் இருக்கிறது.
ஒரு 'ஸ்கிரிப்ட்' என்ன விஷயத்தை சொல்ல வருகிறது என்று தெரிந்து, காட்சியை 'கம்போஸ்' செய்கிறோம். அந்த காட்சியை, ஒளிப்பதிவு பார்வையில் எப்படி பார்க்கிறோம் என்று கவனித்து, அதற்கான உணர்வுகளை உள்ளே கடத்த வேண்டும்.
கதை நடக்கும் உலகம் என்ன என்பதை உணர்ந்தால் தான், நாம் அதற்குள் சென்று, ஷாட் குறித்து தீர்மானிக்க முடியும். அதை இயக்குனரிடம் ஆலோசித்து, ஒளிப்பதிவின் வாயிலாக எப்படி கொண்டு வரலாம் என்பதில் இருக்கிறது, அவரது திறமையும் வெற்றியும்.