/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடம் பளீச்
/
தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடம் பளீச்
தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடம் பளீச்
தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடம் பளீச்
ADDED : பிப் 27, 2025 11:07 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெப்பக்குளம் கரையில், பூவோடு வைக்கும் இடம் அருகே, குவிந்து கிடந்த கழிவு மண் ஓரமாக குவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் மாசி மாத தேர்த்திருவிழா துவங்கியுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள், பூவோடு எடுத்து வந்து, தெப்பக்குளம் அருகே வைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடத்தில் கழிவு மண் குவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த கழிவுமண் அதே பகுதியில் ஓரமாக குவித்து வைத்து, பூவோடு வைக்கும் இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கழிவு மண்ணை முறையாக அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.