/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடம்; போலி ஆவணத்தால் பதிவு
/
ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடம்; போலி ஆவணத்தால் பதிவு
ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடம்; போலி ஆவணத்தால் பதிவு
ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடம்; போலி ஆவணத்தால் பதிவு
ADDED : ஆக 06, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, சேரன் மாநகரை சேர்ந்தவர் ஹேமலதா,58. இவர் கடந்த, 1996ம் ஆண்டு பீடம்பள்ளியில், 8 சென்ட், 192 சதுரடியில் (ரூ.25 லட்சம் மதிப்பு) இடம் வாங்கி பத்திரப்பதிவு செய்து இருந்தார்.
இந்நிலையில், சிங்காநல்லுார், செல்லாண்டியம்மன் நகரை சேர்ந்த பிரகாசம் மற்றும் சரஸ்வதி, இருகூரை சேர்ந்த துரைசாமி ஆகியோர், 2006ம் ஆண்டு போலி ஆவணங்கள் கொண்டு மறு பத்திரப்பதிவு செய்து, சிவக்குமார் என்பவருக்கு இடத்தை விற்றுள்ளனர்.
ஹேமலதா அளித்த புகாரின் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.